மக்களவைத் தலைவருக்குக் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம்!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆளுங்கட்சியின் கட்டாயத்தின் பேரில்
ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறுவது வருத்தத்திற்குரியது!

புதுடில்லி, பிப்.10 ‘ காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் மீது ஆளுங்கட்சியின் கட்டாயத்தின் பேரில் குற்றம்சாட்டுவது மிகுந்த வருத்தத்திற்குரியது’ என மக்கள வைத் தலைவர் ஓம்பிர்லாவுக்கு பிரியங்கா, ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் எழுதிய கடி தத்தில்கூறியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28.1.2026 இல் தொடங்கியது. கடந்த 1.2.2026  முதல் 2027 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஒன்றிய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.க்கள் பேசினர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல், முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி, இன்னும் வெளிவராத புத்தகம் குறித்து பேசினார். இதற்கு ஒன்றிய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவைத் தலைவரும் கண்டிப்பு காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன் உள்ளிட்ட எட்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி, மக்களவைக்கு வரவில்லை

கடந்த நான்காம் தேதி முதலே, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி யில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டு, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை மீது, மாலை அய்ந்து மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை தருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இடைவிடாத அமளியால், நாள் முழுதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், பதிலுரை அளிக்க பிரதமர் மோடி, மக்களவைக்கு வரவில்லை.

இது தொடர்பாக மக்களவையில் மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா கூறுகையில், ‘மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகே சென்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்பாராத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற உறுதியான தகவல் கிடைத்தது. அதனாலேயே அவைக்கு வர வேண்டாம் என, அவரை கேட்டுக் கொண்டேன். அப்படி நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளை சிதைத்தி ருக்கும்’ எனத் தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் பெண்
எம்.பி.க்கள் கடிதம்!

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவுக்கு, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர். அந்தக் கடிதத்தில் பிரி யங்கா, ஜோதிமணி, சுதா உள்ளிட்ட காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கையெ ழுத்துப் போட்டு உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இந்தக் கடிதத்தை ஆழ்ந்த வேதனையுடனும், அரசிய லமைப்பு சட்டப் பொறுப்பு என்ற வலுவான உணர்வுடனும் எழுது கிறோம். மக்களவைத் தலைவர் என்ற பொறுப்பிலும், இந்தஅவையின் அரசியலமைப்புப் பாதுகாவலர் என்ற முறையில் இருக்கும் நீங்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி பெண் எம்.பி.க்கள் மீது ஆளுங்கட்சியின் கட்டாயத்தின் பேரில் குற்றம்சாட்டுவது மிகுந்த வருத்தத்திற்குரியது.

முன்னாள் பிரதமர்கள் குறித்து…

மக்களவைத் தலைவர் என்ற முறையில், நாடாளுமன்றத்தின் கண்ணியம், நேர்மை மற்றும் கட்சி பாரபட்சமின்றி அனைத்து எம்.பி.க்க ளின் பாதுகாப்பு என்பது உங்களின் பொறுப்பு. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசிய பிறகு, பிரதமர் பதில் அளிக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு வேண்டும் என்றே பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இது முன் எப்போதும் நடக்காதது. மறு புறம் ஆளுங்கட்சி விருப்பப்படி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எட்டு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க.
எம்.பி. ஒருவர், முன்னாள் பிரதமர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசுகிறார். உங்களைச் சந்தித்து நீதி கேட்டதுடன், அந்த பா.ஜ. எம்.பி.யை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரிய போது, தவறு நடந்து விட்டது என்று ஒப்புக்கொண்டு நான்கு மணிக்கு வந்து சந்திக்குமாறு கூறினீர்கள்.

மீண்டும் வந்து சந்தித்தபோது, அரசின் முடிவுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தீர்கள். இதன் மூலம் இந்த விவகாரத்தில் நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இது மக்களவைத் தலைவரின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்புகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடியின் பதிலுரை மக்களவையில் இடம்பெறவில்லை. மறுநாள், பிரதமர் அவைக்கு வரா தது குறித்து ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு ஏற்ப, ஆதரவாக பேசியதுடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினீர்கள். எங்களின் போராட்டம் அமைதி வழியிலானது. ஜனநாயக விதிமுறைகளின்படி நடந்தது. எங்க ளில் பலர் சாதாரண பின்னணியைக் கொண்டவர்கள். முதல்முறை அரசி யல்வாதி ஆவார்கள்.

அச்சுறுத்தல் மூலம் எங்களின் குரலை அமைதிப்படுத்த முடியாது!

நாங்கள் மக்கள்விரோத அர சுக்கு எதிராக போரடியதாலும், அதற்குப் பிரதமரை பொறுப்பு ஏற்கக் கூறியதாலும், நாங்கள் குறி வைக்கப்பட்டுள்ளோம். பிரதமர் மோடி, மக்களவைக்கு வராததற்கு அச்சுறுத்தல் என்பது காரணம் அல்ல. பயம் தான் காரணம். எதிர்க்கட்சிகளைச் சந்திக்க அவருக்குத் தைரியம் இல்லை. எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கையில்லை. அச்சு றுத்தல் மூலம் எங்களின் குரலை அமைதிப்படுத்த முடியாது. வெளிப்ப டைத்தன்மை மூலமே மக்களவைத் தலைவர் அலுவலகத்தின் கண்ணி யத்தையும், அவையின் பெரு மையையும் கொண்டு வர முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

நீங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்!

உங்கள் மீது மரியாதை வைத்துள்ளோம். ஆளுங்கட்சி உங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பது தெளிவாகி உள்ளது. மக்க ளவைத் தலைவரின் காவலர் என்ற முறையில் நீங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என விரும்பு கிறோம். இதற்காக நாங்கள் உங்க ளுக்கு ஆதரவாக இருப்போம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *