கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் தேநீர் கடைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், பிப். 8- குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தேநீர் கடைகளில் பகுத்தறிவு திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன்  பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞா.பிரான்சிஸ், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், தொழிலாளரணி செயலர் க.யுவான்சு மாணவர் கழகத் தலைவர் பரத், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை தோழர்கள் மு.பால்மணி, சத்யாராணி, முகிலன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், தூண்டறிக்கைகள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *