மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (06.02.2026) சென்னை, தலைமை செயலகத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 இளநிலை பகுப்பாய் வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர். ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா, கூடுதல் இயக்குநர் மரு.நாகராணி, துணை இயக்குநர் மரு.சித்திரசேனா மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.
