30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரபல அய்.டி. நிறுவனம் எடுத்த முடிவு! ஊழியர்கள் அதிர்ச்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், பிப்.5 அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு முதல் ஏஅய் முதலீடுகளை அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஓபன் ஏஅய் உள்பட பல நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏஅய் மய்யங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலை சந்தித்தது.

இதனையடுத்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 30,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரக்கிள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலமாக அந்த நிறுவனத்தால் 8 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும். இந்த தொகையை ஏஅய் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முதலீடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்று ஆரக்கிள் கருதுகிறது. ஆரக்கிள் நிறுவன வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை என்று இது கூறப்படுகிறது.

உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் சமீபத்தில் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான தாக்கீது வழங்கியது. ஏஅய் பயன்பாடு, பொருளாதார தாக்கம் ஆகியவற்றால் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருவது அய்டி பணியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *