அய்.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
| உ |
லகம் ‘தண்ணீர் திவால்’ நிலைக்கு தள்ளப்பட்டி ருப்பதாக அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தண்ணீர் திவால் அறிக்கை
ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச் சிக்கலில் வீழ்வது இயற்கை. இதனை அவர் திவா லாகிவிட்டார் என்றும் சொல்வார்கள். அதுவே நீர்வளத்திற்கு நடந்தால்? சற்று யோசித்துப் பாருங்கள்.
கடந்த சில 10 ஆண்டுகளாக இயற்கை வழங்கும் நீரைவிட, நாம் சுரண்டிய நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அய்க்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ‘உலகளாவிய தண்ணீர் திவால்’ அறிக்கை, நிலத்தடி நீர் வற்றி வருவது மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளை விரி வாகப் பட்டியலிட்டு இருக்கிறது.
இந்த அறிக்கை வெறும் தண்ணீர் தட்டுப்பாடு என்பதைத் தாண்டி, நாம் மீளமுடியாத ஒரு பேராபத் தில் சிக்கியுள்ளோம் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. மேலும் இதனை வெறும் எச்சரிக்கையாக மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் வாழ் வாதாரத்திற்கான அபாய சங்காகவும் ஊதியுள்ளது.
70 சதவீத நிலத்தடி நீர் ஆதாரங்கள்
அப்படி என்னதான் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
உலகில் 20 பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் 13 நீர்நிலைகள் மரண நிலையில் இருக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் நிலத்தடிநீர் மீண்டும் ஊற்று எடுக்க வாய்ப்பே இல்லாத ஆழத்துக்கு சென்றுவிட்டது.
மழை மற்றும் பனி உருகுவதன் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரின் அளவைவிட, நாம் பயன்படுத்தும் நீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நாம் இயற்கையின் ‘சேமிப்பான’ நிலத்தடி நீரையும், பனிப்பாறைகளையும் வேகமாகச் செலவழித்து வருகிறோம்.
நன்னீர் பயன்பாட்டில் சுமார் 70 சதவீதத்தை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம்.
உலகளவில் உள்ள 70 சதவீத முக்கியமான நிலத்தடி நீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. இயற்கையாக நிலத்தடி நீர் மீண்டும் ஊற்றெடுக்க எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட நாம் அதனை உறிஞ்சி எடுக்கக் கூடிய வேகம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, நிலப்பரப்பு உள்வாங்கும் அபாயம் உள்ளது.
3ஆம் உலகப் போர்
காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு சீரற்றுப் போய் இருக்கிறது. நதிகளின் ஆதாரமான பனிப்பாறைகள் 1970-க்கு பிறகு 30 சதவீதம் உருகிவிட்டன.
நிலத்தடி நீரை சேமிக்கும் வங்கிகளாக செயல்பட்டு வந்த ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் அழிந்து நீர் சுழற்சி பாதிக்கப்பட்டிருக்கிறது.
நகரமயமாக்கல் மற்றும் மாசுபாடு காரணமாகவும் தண்ணீர் திவால் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதாவது நகரங்களில் நிலப்பரப்பு முழுவதும் கான்கிரீட் பூசப்பட்டு, மழைநீர் பூமிக் குள் செல்வது தடுக்கப்படுகிறது. மேலும் 80 சதவீத கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், நீர்நிலைகளில் கலந்து நன்னீரை மாசுப்படுத்துகின்றன.
‘மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும்’ என்ற பேச்சுகள் வெறும் யூகமாக சொல்லக் கூடிய வார்த்தையோ, கற்ப னைக் கதையோ அல்ல. அதுதான் எதார்த்தமான உண்மை என்பதை அய்.நா.வின் ‘தண்ணீர் திவால்’ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது பல கோடி மக்களின் தாகத்தை மட்டுமல்ல உலகளாவிய உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை
அய்.நா. சுட்டிக்காட்டி யுள்ள இந்த அறிக்கை யில்,இந்தியா உலகளாவிய தண்ணீர் திவால் நிலையின் மய்யப்புள்ளியாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பகுதிகளில் ஒன்றாகத் தெரி விக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சென்னை நகரம் உலகளவில் தண்ணீர் திவால் நிலையை நோக்கி வேகமாக நகரக்கூடிய 25 நகரங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னை 2019-இல் சந்தித்தது போன்ற தண்ணீர் இல்லாத நிலை (டே ஜீரோ) மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பேராபத்து நமக்குதான்.
தீர்வுகள் என்ன?
அய்க்கியநாடுகள் சபை தண்ணீர் திவால் நிலை குறித்து எச்சரிக்கை கொடுத்து இருந்தாலும், அதற்கான அதிரடித் தீர்வுகள் என்ன? என்பதை யும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தண்ணீர் நெருக் கடி மேலாண்மையை இனி செய்ய முடியாது. மாறாக திவால் நிலையை மேலாண்மை செய்யத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
l தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்வதை குறைக்க வேண்டும்.
l விவசாயத்தில் சொட்டு நீர் பாசனத்தை கட் டாயமாக்க வேண்டும்.
l நகரங்களில் கழிவுநீர் மறுசுழற்சியை ஒரு போர்க் கால நடவடிக்கையாக முன்னெடுக்க வேண்டும்.
l எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரை சேமிக்க கடு மையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்.
l பொருளாதார திட்டமிடல்களில் தண்ணீரை முதன்மைக் காரணியாக மாற்றவேண்டும். நதிநீர் பகிர்வு தொடர்பான பன்னாட்டு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்வுகளையும் வழங்கியுள்ளது.
