‘‘மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.5 மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு. நம் திராவிட மாடலில் இருகண்களாய் விளங்கும் இத்துறைகளில் நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங் களை, பல கோடி மக்கள் பயன டையச் சிறப்புற நிறைவேற்றி வருகிறோம்.

இந்த வகையில், நாம் உரு வாக்கிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது. சிறிய நகரங்களிலும்கூட சிக்கலான அரசு மருத்துவமனைகளில் சவாலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிர் காக்கும் உயரிய பணியை, அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவக் குழுவினர் செய்து வருவது நாளும் செய்திகளில் இடம்பெறுவது பெருமிதத்தை அளிக்கிறது!

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை – எளிய மக்களின் எண்ணிக்கை கடந்த நான்கரை ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து இருப்பது, அரசின் மருத்துவக் கட்டமைப்பின் மீதும் – மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறமை மற்றும் அக்கறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைக் காட்டுகிறது. மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *