மயிலாடுதுறை, ஜன.5 மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் குத்தாலத்தில் நேற்று (4.2.2026) காலை 11 மணியளவில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கழகக் காப்பாளர் சா.முருகையன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழகச் செயலாளர் கு. இளமாறன் அனைவரையும் வர வேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
21.2.2026 சனிக்கிழமையன்று தஞ்சாவூரில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு மாவட்ட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாநாட்டு விளம்பரங்கள்!
மேற்படி மாநாட்டு செலவிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நிதியினை விரைவில் வசூல் செய்து கொடுப்பது என்றும் மாநாட்டுக்கான விரிவான விளம்பரங்களை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டக் கழகத் துணைத்தலைவர் ஞான.வள்ளுவன், மயிலாடுதுறை நகர கழகத் தலைவர் சீனி. முத்து, நகர கழகச் செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் அ.சாமிதுரை பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரெ.செல்லதுரை குத்தாலம் ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் கு.இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் க.அருள்தாஸ் நன்றி கூறினார்.
