மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் அவர்கள் வயதுமூப்பு, உடல்நலக் குறைவின் காரணமாகத் தனது 95-ஆம் வயதில் நேற்றிரவு (03.02.2026) காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, மாணவர்களின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். சமச்சீர் கல்விக் குழுவில் இடம்பெற்று அதைச் சாத்தியப்படுத்தியவர்களுள் ஒருவர். நீட், தேசியக் கல்விக் கொள்கை போன்றவற்றை எதிர்த்தவர்.
அவரது மறைவு கல்வி உரிமைப் போராட்டத்திற்கு ஓர் இழப்பே ஆகும்.
அவரது மறைவால் துயருறும் தோழர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது உடல் இன்று காலையே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. மறைந்தும் மாணவர்களின் கல்விக்குப் பயன்படுகிறார் என்பது அவரது வாழ்வுக்குப் பாராட்டத்தக்க பொருத்தமான நிறைவல்ல… நீட்சியாகும்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
04.02.2026
