ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடை பயணம்! செல்வப்பெருந்தகை அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 4– தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜக அரசை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு  முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பிப்.5ஆம் தேதி (நாளை) மதியம் 2 மணியளவில் எனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் நடைப்பயணம், கிழக்கு தாம்பரம் – பாரத மாதா தெரு, வேளச்சேரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகிலிருந்து, மேற்கு தாம்பரம் – சண்முகம் சாலை வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதேபோன்று, பிப்.7ஆம் தேதி திருச்சியிலும், 8ஆம் தேதி திண்டுக்கல்லிலும், 9ஆம் தேதி தென்காசியிலும், 12ஆம் தேதி கோவையிலும் நடைபயணம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சருக்கு நன்றி

செல்வப்பெருந்தகை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் “சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தியின் பெயரை சூட்டவேண்டுமென்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படி இந்திரா காந்தியின் பெயரை சூட்டி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றி” என கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *