ஜெயங்கொண்டம், பிப்.4– தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுக்கான ‘ஏ’ சான்றிதழ் தேர்வில் 273 மாணவர்கள் பங்கேற்றனர்.
என்சிசி பிரிவில் இடம்பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் ராணுவத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. என் சி சி சார்பில் ‘ஏ’ சான்றுத் தேர்வு 01.02.2026 அன்று கும்பகோணம் நகர மேல்நிலைப்ப பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி 24 (JD,JW) மாணவர்கள் அணியின் பயிற்சியில் துப்பாக்கியை கழற்றி மாற்றுதல், கையாளுதல், ராணுவம் தொடர்பாக குறியீட்டு படங்கள் பார்த்து இடத்தைக் கூறுதல் ஆகிய செய்முறைத் தேர்வுகள் மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வில் பங்கு பெற்ற, நல்ல முறையில் பதில் அளித்த தேசிய மாணவர் படை மாணவர்களையும் மற்றும் என்சிசி ANO ராஜேஷ் ஆகியோரையும் பள்ளித் தாளாளர், முதல்வர்
ஆர்.கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
