ஒன்றிய நிதி நிலை அறிக்கை அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மல்லிகார்ஜூன கார்கே

புதுடில்லி, பிப். 3 ஒன்றிய நிதி நிலை அறிக்கை 2026 நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் வழங்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்,

“மோடி அரசாங்கத்திடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன. நிதிநிலை அறிக்கை 2026 இந்தியாவின் பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை.

“திட்டச் செயல்பாடு முறை” இப் போது “சவாலான பாதை” ஆகி விட்டது.

“சீர்திருத்த விரைவு ரயில்” எந்த “சீர்திருத்த” சந்திப்பிலும் அரிதாகவே நிற்கிறது.

இறுதி விளைவு: கொள்கை தொலைநோக்கு பார்வை இல்லை, அரசியல் உறுதிப்பாடு இல்லை.

நமது அன்னமிடும் விவசாயிகள் இன்னும் அர்த்தமுள்ள நலத்திட்ட ஆதரவு அல்லது வருமான பாதுகாப்பு திட்டத்திற்காக காத்திருக்கிறார்கள்.

சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் காணப்பட்ட நிலைகளைத் தாண்டிவிட்டது, ஆனால் நிதிநிலை அறிக்கை அதை பற்றி குறிப்பிடக்கூட இல்லை. பட்டியல் ஜாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொரு ளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை.

நிதி ஆணையத்தின் பரிந்துரை களை மேலும் ஆய்வு செய்ய வேண் டும். ஆனால் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசு களுக்கு அவை எந்த நிவார ணத்தையும் வழங்குவதாக தெரிய வில்லை. கூட்டாட்சித் தத்துவம் பலியாகி விட்டது,” என குறிப்பிட் டுள்ளார்.

மேலும், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் என்னென்ன இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் பட்டியலிட்டு விளக்கியுள்ளார்.

அதில்,

‘‘- உற்பத்தித் துறை: புத்துயிர் பெறுவதற்கான உத்தி இல்லை; 13 சதவீதம் என்ற நிலையிலேயே தேங்கி நிற்கிறது. “மேக் இன் இந்தியா” எங்கே?

– வேலைவாய்ப்புகள்: நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனுக்காகவோ அல்லது பணியிடங் களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காகவோ எந்த ஒரு தீவிர திட்டமும் இல்லை. முந்தைய பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் விளைவு என்ன?

– ஏற்றுமதி/வர்த்தகம்: ஏற்றுமதி சரிவு, கட்டண அபாயங்கள், வர்த்தக பற்றாக்குறை, சுருங்கி வரும் உலகளாவிய பங்கு ஆகியவற் றிற்கு எந்த பதிலும் இல்லை. வீழ்ச்சி யடைந்து வரும் ரூபாய்க்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?

– ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம்: பணவீக்கத்திலிருந்து நிவாரணம் இல்லை; சேமிப்பு குறைகிறது, கடன் அதிகரிக்கிறது, ஊதியம் தேக்கமடைந்துள்ளது. நுகர்வோர் தேவையை மீண்டும் தூண்டுவதற்கு ஏன் எந்த யோசனையும் இல்லை?

– தனியார் முதலீடு: நம்பிக் கைக்குரிய சமிக்ஞை இல்லை – அந்நிய நேரடி முதலீடு மற்றும் ஊதிய தேக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஏன் சிறிய மாற்றங்கள் மட்டும், கட்ட மைப்பு சீர்திருத்தங்கள் இல்லை?

– உள்கட்டமைப்பு: வாக்குறு திகள் மீண்டும் மீண்டும் கூறப்படு கின்றன, செயல்பாடு இல்லை – நகரங்கள் இன்னும் வாழத் தகுதி யற்றவையாகவே உள்ளன. எப்போது நமக்கு “ஸ்மார்ட் சிட்டிகள்” அல் லது வாழ தகுதியான நகரங்கள் கிடைக்கும்?

– சமூகப் பாதுகாப்பு: சமூக பாதுகாப்பு, நலத்திட்டங்கள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட் டத்திற்கு பதிலாக வந்த புதிய சட்டத் திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை. ஏன்?

இந்த நிதி நிலை அறிக்கை எந்தத் தீர்வுகளையும் வழங்கவில்லை, கொள்கையின்மை மறைக்க முழக்கங் களை கூட வழங்கவில்லை!” என குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *