அமராவதி, பிப்.2 ஆந்திரா- ஒடிசா எல்லை யில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக வினோதத் திருவிழாவை நடத்தி வரு கிறார்களாம். இளைஞர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் மரக்கட்டைகளை வெட்டி 4 நாள்கள் மாட்டு சாணத்தில் ஊற வைத்தனர். நேற்று முன்தினம் (31.1.2026) மாலை கிராமத்தில் திருவிழா நடந்தது. சாணத்தில் ஊற வைத்தக் கட்டையை எடுத்து வந்து இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சிரித்தபடியே அடித்தனர்.
இந்நிகழ்வை ஊர் மக்கள் ஒன்று கூடி வேடிக்கை பார்த்தனர். உடலில் காயம் அடைந்த இளைஞர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்கள் மஞ்சள் அரைத்து காயம்பட்ட இடத்தில் பூசிவிட்டனர்.
இது எப்படி இருக்கிறது!
