கடலூர்: தகவல் தொழில்நுட்ப மய்யமாகிறது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கடலூர், பிப். 1– கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எச்.இ.பி.எல் (HEPL – Hema’s Enterprises Pvt Ltd) நிறு வனம், தற்போது மாபெரும் பணிப்பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்பை அறிவித்துள்ளது. இது ஏதோ சாதாரண நிறுவனம் அல்ல; புகழ்பெற்ற கவின்கேர் (CavinKare) குழுமத்தின் ஒரு பகுதியாகச் செயல்படும் நிறுவனம் இது. இங்கு மென்பொருள் மேம்பாடு (Software Development) மற்றும் அய்டி தகவல் தொழில்நுட்பக் கலந்தாய்வு கன்சல்டிங் சேவைகள் வழங்கப்படுகின்றன.

வேலை தேடும் இளைஞர்களின் திறனை வளர்க்கும் நோக்கில், கீழ்க் கண்ட 5 அதிநவீன தொழில்நுட்பப் பிரிவுகளில் சுமார் 100 இடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர். பொதுவாக இதுபோன்ற துறை களுக்குச் சென்னையில் கூட வாய்ப் புகள் கிடைப்பது அரிது.

* செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI):

* இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT): ஸ்மார்ட் டிவைஸ் தொழில்நுட்பம்.

* ரோபோட்டிக்ஸ் (Robotics): இயந்திரவியல் ஆர்வம் உள்ளவர் களுக்கு.

* சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் (Software Development): புரோகிராம் கோடிங் எழுதத் தெரிந்தவர்களுக்கு.

* ட்ரோன் டெக்னாலஜி (Drone Technology): வளர்ந்து வரும் புதிய துறை.

யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கல்லூரி மாணவர்கள், படித்து முடித்த புதியவர்கள் (Freshers) மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். “எனக்கு முன் அனுபவம் இல்லையே” என்று தயங்க வேண்டாம். இது ஒரு பயிற்சித் திட்டம் என்பதால் ஆர்வம் மட்டுமே முக்கியத் தகுதி. உதவித்தொகை (Stipend) குறித்த விவரங்கள் நேர்காணலின் போது தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பெற விரும்புபவர்கள், கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறும் நேரடித் தேர்வில் (Walk-in Interview) கலந்து கொள்ள வேண்டும்.

தேதிகள்: வரும் பிப்ரவரி 3 (செவ்வாய்) மற்றும் பிப்ரவரி 4 (புதன்), 2026.

நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மட்டுமே. (குறிப்பிட்ட நேரத்திற்குள் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்).

இடம்: Hema’s Enterprises Pvt Ltd (HEPL), எண். 59, எஸ்-12, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் (SIDCO Industrial Estate), செம்மண்டலம், கடலூர்.

மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 7010993430 என்ற அலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *