ஒன்றிய அரசுக்கு காந்தியாரையும் பிடிக்காது; மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

3 Min Read

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள்கள்

திருட்டுப் போன கடவுள் சிலைகள் இந்தியாவில் ஒப்படைக்க அமெரிக்க முடிவு

வாசிங்டன், பிப்.1 தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மூன்று வெண்கல கடவுளர் சிலைகளை , மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் சோழர் காலம் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த சிலைகள், திருடிச் செல்லப்பட்டு , அமெரிக்காவின் வாசிங்டனில் உள்ள ‘ஸ்மித்சோனியன்’ ஆசிய கலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன.  இந்த வெண்கல சிலைகள் தங்கள் நாட்டில் இருந்து திருடி வரப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது

இதையடுத்து, பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் ஒளிப்பட ஆவணக் காப்பகத்தின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1956 முதல் 1959–க்குள் தமிழ்நாடுக் கோயில்களில் இந்தச் சிலைகள் இருந்ததை, ஒளிப்பட ஆதாரங்கள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, அந்தச் சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகம் முடிவு செய்துள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டோரிஸ் வீனர் கேலரியிடமிருந்து சிவ நடராஜர் சிலையை அருங்காட்சியகம் வாங்கியது. ஆனால், அவர்கள் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தது, தற்போது கண்டறியப்பட்டுள்ளது

ஒப்படைக்கப்பட இருக்கும் சிலைகளின் விவரம்

சிவ நடராஜர் சிலை (சோழர் காலம் கி.பி. 990): தஞ்சை யின் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் அமைந்துள்ள சிறீ பவ அவுஷதீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டது. சோமாஸ்கந்தர் சிலை (சோழர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு): திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விஸ்வநாதர் கோயிலில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டது

பரவை நாச்சியாருடன் சுந்தரமூர்த்தி நாயனார் இருக்கும் சிலை; கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழ புரத்தில் உள்ள சிவன் கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

இதில் சிவ நடராஜர் சிலை அருங்காட்சியகத்தில் நீண்ட காலம் வைப்பதற்கு இந்திய அரசு அனுமதி யளித்துள்ளது. இந்த சிலை, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இமயமலை கலைப்பிரிவில், அருங்காட்சி யக கண்காட்சியில் சேர்க்கப்பட இருக்கிறது.

‘‘இஸ்லாமியர்களை விரட்டுங்கள்’’ என்ற அசாம் முதலமைச்சர் பேச்சை –

நாஜி சிந்தனையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

கவுகாத்தி, பிப்.1 அசாம் மாநிலத்தில் நிலவும் அரசி யல் சூழலில், முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் சமீபத்திய உரை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. சிறுபான்மையினரை இலக்கு வைத்து அவர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள், ஜனநாயக விழுமி யங்களுக்கு எதிரானவை என பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இன ஒழிப்பைத் தூண்டும் பேச்சு!

முஸ்லிம் சமூகத்தினரை அசாம் மாநிலத்தை விட்டு வெளியேற்றும் நோக்கில் முதலமைச்சர் பேசிய கருத்துகள், மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, “அவர்களைத் தொல்லைப்படுத்துங்கள், மாநி லத்தை விட்டு விரட்டுங்கள்” என்ற அவரது பேச்சு, இன ஒழிப்பு சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளது

அசாம் எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரத சைகியா, இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி அசாம் முதலமைச்சர் மீது சட்டப்பூர்வ மான நடவடிக்கைகளை எடுக்கவும், வழக்குப் பதிவு செய்யவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முதலமைச்சரின் இத்தகைய பேச்சு ஹிட்லரின் நாஜி கொள்கைகளுக்கு இணையானது. எனவே, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து (Suo Motu) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

பதவியிலிருந்து நீக்கவேண்டும்!

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய முதலமைச்சரை பா.ஜ.க. தலைமை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பதவி விலகச் செய்ய வைக்க வேண்டும்.

இத்தகைய குரூரமான கருத்துகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். மவுனம் காப்பது இக்கருத்துகளை ஏற்றுக் கொள்வதற்குச் சமம் என எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் உற்றுநோக்கப்படுகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *