தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.31 தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் மற்றும் தொழில் துறையினருக்கான சலுகை களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அமைச்சரவை கூட்டம்

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. மீண்டும் கூடும் தேதி குறிப் பிடாமல் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கமாக, ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரியில் முடிந்ததும், பிப்ரவரியில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழ்நாடு அரசு இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலும், தேர்தலை கருத்தில் கொண்டே இடைக்கால நிதி நிலை அறிக்கையை அரசுகள் தாக்கல் செய்யும். அந்த வகையில், பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

இந்த சூழலில், பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புதிய அறிவிப்புகள், ஏற்கெனவே உள்ள திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம்.

இதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் பிப்.5-ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான நாள், இடம்பெற வேண்டிய முக்கியமான புதிய அறிவிப் புகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கத்துக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.

ஒப்புதல்

இதுதவிர, தொழில் முதலீடுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு காலகட்டங்களில் செய்த ஒப்பந்தங்களின் அடிப் படையில், பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவுகின்றன. அந்த நிறுவனங்களுக்கான சலுகைகளுக்கும் அமைச் சரவைதான் ஒப்புதல் அளிக் கிறது. அந்த வகையில், பல் வேறு நிறுவனங்களுக்கான ஒப்புதலும் அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.

இது மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் முத்திரைத் திட்டங்கள் குறித்து முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் அவ்வப் போது ஆய்வு செய்து, அறி வுறுத்தல்களை வழங்கி வருகிறார். தமிழ்நாடு அரசு சார்பில் தொழில் துறை முதலீடுகள் குறித்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்தும் அமைச் சரவையில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில், அர சின் நடவடிக்கைகள் குறித் தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப் படவும் வாய்ப்பு உள்ளது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *