பெங்களூரு, ஜன.31 கருநாடகாவில் மொத்தம் உள்ள 6 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் காந்தியாரின் பெயரைச் சூட்ட காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
ஒன்றிய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டதில் (MGNREGA) காந்தியாரின் பெயரை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
6000 கிராம பஞ்சாயத்து அலுவலகங் களுக்கும் காந்தியாரின் பெயரைச் சூடும் அரசின் முடிவை பேரணி யின்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அறிவித்தனர். ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு 90% நிதி வழங்கிய நிலையில், தற்போது புதிய முறையின்படி மாநிலங்கள் 40% நிதி வழங்க வேண்டும் என மாற்றப்பட் டுள்ளதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி காந்தியாரின் பாரம்பரியத்தை அழிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்தத் திட்டம் தொடர்பான விவாதத்திற்காகச் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
