சென்னை, ஜன.27- சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக, ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் கூடிய நேரலை பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகளை அமைக்கும் பணியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் பயணம் செய்யும் விதம் பெரிய அளவில் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக 18 பேருந்து நிறுத்தங்களில் செய்யப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நகரின் 616 இடங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 71 பேருந்து முனையங்கள்: பிராட்வே, தியாகராயர் நகர், கிண்டி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட 71 முக்கியப் பேருந்து நிலையங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்படும்.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம்:
துல்லியமான வருகை நேரம்
துல்லியமான வருகை நேரம்
இனி பேருந்து எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கத் தேவையில்லை. பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகள் மூலம், அந்தப் பேருந்து தற்போது எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதைப் பேருந்து நிறுத்தங்களில் உள்ள டிஜிட்டல் பலகைகள் துல்லியமாகக் காட்டும்.
இந்த அமைப்பின் சிறப்பம்சங்கள்
நேரலை வருகை நேரம் (ETA): அடுத்த பேருந்து எத்தனை நிமிடங்களில் வரும் என்ற தகவல்.
தட விவரங்கள்: எந்தெந்த எண்கள் கொண்ட பேருந்துகள் அந்த நிறுத்தத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றன என்ற விவரம்.
இருமொழி அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் திரையிடப்படும். முதற்கட்டமாக 18 பேருந்து நிறுத்தங்களில் செய்யப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நகரின் 616 இடங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கியப் போக்குவரத்து மய்யங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
500 பேருந்து நிறுத்தங்கள்: மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியமான 500 நிறுத்தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
71 பேருந்து முனையங்கள்: பிராட்வே, தியாகராயர் நகர், கிண்டி மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட 71 முக்கியப் பேருந்து நிலையங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்படும்.
45 இதர இடங்கள்: முக்கியச் சந்திப்புகள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இவை நிறுவப்படும்.
பத்திரப்பதிவுக்கு இனி அசல் ஆவணங்கள் கட்டாயம்!
தமிழ்நாடு அரசின்
மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
சென்னை, ஜன.27- பத்திரப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அசல் ஆவணம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2025 ஏப்ரல் மாதம் பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் காரணமாக நில மோசடிகளை தடுக்க தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைத்துள்ளது. முக்கிய அம்சமாக, இனி எந்தவொரு சொத்தையும் விற்பனை செய்யவோ அல்லது கொடையாக வழங்கவோ பதிவு அலுவலகத்திற்கு செல்லும்போது, அந்த சொத்தின் அசல் ஆவணம் கண்டிப்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
இதற்கு முன், அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக கூறி பொய்ப் புகார் அளித்தோ அல்லது நகல் ஆவணங்களை வைத்தோ முறைகேடாக சொத்துப்பதிவு நடந்தன. இனி அப்படி செய்ய முடியாது. இந்த சட்டம் மோசடிப் பத்திரப்பதிவில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்குகிறது.
பொய்ப் தகவல்களை அளித்து சொத்துப்பதிவு செய்பவர்களுக்கும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். சில குறிப்பிட்ட நேரங்களில் அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிலங்களை மாற்றும்போது இதற்கு விதிவிலக்கு உண்டு. மேலும், நீதிமன்றத்தின் மூலம் சொத்து விற்பனை நடக்கும்போது, குடும்பத்திற்குள் நடக்கும் பாகப்பிரிவினையின் போது ஒருவரிடம் மட்டும் அசல் இருந்தால்போதும் பத்திரப்பதிவு செய்யலாம்.
அதனால் அசல் ஆவணங்களை மிகப்பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது தொலைந்து போனால், காவல்துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என்ற சான்றிதழ் பெறுவது உள்பட பல சட்ட நடைமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த சட்டப்படி மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறிய முடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
