பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46ஆவது ஆண்டு விழா “முன்னாள் மாணவியின் சாதனைப் பயணம் மாணவர்களுக்குப் பாடம்”

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, ஜன. 26- திருச்சி  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46ஆவது ஆண்டு விழா 24.01.2026 அன்று பள்ளி வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டறிக்கை மற்றும் சாதனைப் பட்டியல்:

மொழி வாழ்த்துடன் தொடங்கிய விழாவின் தொடக்கமாக, மாணவியரின் கலைநயமிக்க வரவேற்பு நடனமும், தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, செல்வி.எஸ்.ரம்யா வரவேற் புரையாற்றி நிகழ்விற்கு வந்தோரை வரவேற்றதும் அரங்கில் உள்ளோரைக் கவர்ந்தது.

2024-2025ஆம் கல்வியாண்டின் ஆண்டறிக்கையைப் பள்ளி முதல்வர் முனைவர் க. வனிதா  வாசித் தார். அதில் கடந்த ஓராண்டில் கல்வி, விளையாட்டு மற்றும் பிற புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் புரிந்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.

தாளாளரின் நெகிழ்ச்சியும் அறிவுரையும்:

விழாவிற்குத் தலைமை வகித்த பள்ளித் தாளாளர்.முனைவர் வீ.அன்புராஜ் தனது உரையில், “எங்கள் பள்ளியில் பயின்ற ஒரு மாணவி, இன்று இதே மேடையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்திருப்பது நிர்வாகத்திற்குப் பெருமை அளிப்பதோடு, மிகவும் உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் குறிப் பிட்டார். மேலும் அவர் பேசுகையில்:

மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும்.

நவீன காலத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவுமுறை இடைவெளியைக் குறைக்க வேண்டியது அவசியம் என்று கூறி, பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கும் பிரத்யேகப் பயிற்சிகள் மற்றும் கடந்த கல்வியாண்டில் ரூ.பத்து இலட்சத்திற்கும் மேல் கல்வி உதவித் தொகை வழங்கியது குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்கள் நல்வழியில் நடப்பதோடு, நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சிறப்பு விருந்தினரின் எழுச்சியுரை:

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இப்பள்ளியில் 2007-ஆம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவியும், திருச்சி ‘அய்டெக்டியூனர்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான திருமதி. ராஜசிறீ மோகன் மாணவர்களிடையே பேசுகையில்:

“மாணவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சாமல் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும். தேவையற்ற பயம், தயக்கம் இன்றிச் சூழலுக்கு ஏற்பத் துணிவுடன் செயல்பட வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் அலைபேசி யுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்து, தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் பிள்ளைகளுடன் செலவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

“என்னைப்போல நீங்களும் எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தில் உயர்ந்து, இந்தப் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வர வேண்டும்” என்று கூறி, தன்னை உருவாக்கிய ஆசிரியர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கருத்தாழமிக்க கலை நிகழ்ச்சிகள்:

விழாவின் ஒரு பகுதியாக மாண வர்களின் தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் நடைபெற்றன. இந்த நாடகங்கள், தற்போதைய சூழலில் தேவைக்கேற்ப அலைபேசி பயன்பாடு, தொழில்நுட்பங்களுக்கு நாம் தர வேண்டிய இடம் மற்றும் மனித உணர் வுகளுக்குத் தர வேண்டிய முக்கியத்துவம் ஆகியவற்றை மிக அழகாகச் சமூகத்திற்கு உணர்த்தும் வகையில் அமைந்திருந்தன.

சாதனையாளர்களுக்குப் பரிசுகள்:

விழாவில் கல்வி மற்றும் வருகைப் பதிவில் சிறந்து விளங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன:

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளும், 100% தேர்ச்சியைத் தந்த ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்: எல்.கே.ஜி முதல் 9-ஆம் வகுப்பு வரை கடந்த கல்வியாண்டில் ஆண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் மற்றும் 100% வருகைப் பதிவு தந்த மாணவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நன்றியுரை:

விழாவின் இறுதியில், பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியரும், 46ஆவது ஆண்டு விழா ஒருங்கிணைப்பாளருமான நா. அருண் பிரசாத் நன்றியுரையாற்றி, நிகழ்விற்கு பக்கபலமாக இருந்தோருக்கு நன்றி கூறியதைத் தொடர்ந்து, விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *