தெரிந்துகொள்வீர், இதுதான் ஹிந்துத்துவா!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஹரித்துவார் கங்கை நதிக்கரை படித்துறைகளில்

மாற்று மதத்தினருக்குத் தடையா?

உத்தராகண்ட் அரசு பரிசீலனை

ஹரித்துவார், ஜன.27 ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியின் 105 ‘புனித’ படித்துறைகளில் (Ghats), ஹிந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்குத் தடை விதிப்பது குறித்து உத்தராகண்ட் மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

ஹரித்துவார் படித்துறைகளின் பராமரிப்பைக் கண்காணித்து வரும் ‘கங்கா சபை’ மற்றும் உள்ளூர் துறவிகள் தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரிஷிகேஷ், ஹரித்துவா ஆகிய இரு நகரங்களையும் ‘ஸநாதன புனித நகரங்களாக’ அறிவிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் இந்தப் பரிசீலனைக்கு ஹரித்வார் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் கலந்து காணப்படுகிறது.

இது குறித்து எழுந்துள்ள முக்கிய விமர்சனங்கள்:

இத்தகைய தடை சட்டப்படி சாத்தியமானது அல்ல என்றும், இது விரும்பத்தக்கது அல்ல என்றும் வழக்குரைஞர் சுதான்ஷு திவேதி தெரிவித்துள்ளார்.

‘‘நமது மதத்தின் தாராளவாத மற்றும் பரந்த மனப்பான்மை கொண்ட பிம்பத்தை இத்தகைய பாகுபாடு கடுமையாக பாதிக்கும்’’ என்று நீர்மின் துறையின் முன்னாள் நிர்வாகப் பொறியாளர் ராகேஷ் சந்திரா கவலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘தி இந்து’, 17.12.2025

ஹிந்து அல்லாதோருக்கு பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் தடையாம்!

பத்ரிநாத், ஜன.27 உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பிற கோயில்களில் நுழைய, ஹிந்து அல்லாதோருக்கு தடை விதிக்கப்படுவதாக அக்கோயில்களை நிர்வ கிக்கும் பத்ரிநாத் – கேதார்நாத் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

உத்தராகண்டில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை ‘சார்தாம்’ என்றழைக்கப்படுகின்றன. இந்நிலையில், பத்ரிநாத் – கேதார்நாத் கோயில் நிர்வா கத் தலைவர் ஹேமந்த் திவேதி நேற்று (26.1.2026) கூறியுள்ளதாவது:

பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் மற்றும் கோயில் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்களில், ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பான தீர்மானம், நிர்வாகக் குழுவின் வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் . குளிர்காலத்தை முன்னிட்டு, ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த பத்ரிநாத் கோயில் நடை, ஏப்ரல் இருபத்து மூன்றில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் . இவ்வாறு அவர் கூறினார். இதன்படி , நுாற்றாண்டுகள் பழைமையான பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோயில்களில், ஹிந்துக்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர்.

‘தினமலர்’, 27.1.2026

கிறித்துவர், முஸ்லீம்களின் மதவழிபாட்டு இடங்களில் எந்த மதத்தினரும் செல்லத் தடை இல்லை!

ஹிந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்? என்று கேட்பவர்கள் சிந்திக்கட்டும்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *