100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கிய பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது

1 Min Read

சென்னை, ஜன. 24- பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரசு நிர்வாகி ரஞ்சன்குமாரும் தனது வீட்டு மாடியில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

கருப்புக்கொடி போராட்டம்

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன்குமார் கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் வீட்டுக்காவலில் லவைக்கப்பட்டுள்ள நிலையில் மாடியில் நின்று காங்கிரஸ் கட்சியினரோடு சேர்ந்து கருப்பு பலூன் பறக்க விட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதே போல, பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கருப்புச்சட்டை அணிந்து கருப்புக்கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   சென்னை பெரியமேடு மசூதி எதிரே  உள்ள அம்பேத்கர் சிலை அருகே வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவுன்சிலர் டில்லிபாபு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் இந்தி திணிப்பு மும்மொழிக் கொள்கை, பேரிடர் நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என மக்களின் அடிப்படை திட்டங்களுக்கு நிதி அளிக்காமலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததையும் கண்டிக்கும் வகையில் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் எடுத்து வந்து கருப்புக்கொடி  காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரையும் பெரியமேடு காவல் துறையினர் கைது செய்தனர். பிறகு கண்ணப்பர் திடல் சமுதாய நல கூட்டத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *