அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ்
உயர் நீதிமன்றத்தை அணுக
அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதா?
புதுடில்லி, ஜன.22-அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின் கீழ், உயர்நீதி மன்றம் அணுக அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளதா என்று ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
பினராயி விஜயனை சிக்க வைக்க முயற்சி
கடந்த 2020ஆம் ஆண்டு,கேரளாவில் தங்க கடத்தல் விவரம் வெடித்தது. முதலமைச்சர் அலுவலகத்துக்கும் அதில் தொடர்புஇருப்பதாக பேசப்பட்டது.
இது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர் களை சிக்க வைக்க குற்றவாளி களுக்கு அமலாக்கத்துறை அழுத்தம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.
இதை விசாரிக்க கேரள அரசு விசாரணை ஆணையத்தை நியமித்தது. ஒன்றிய விசாரணை அமைப்புக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்க கேரள அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அமலாக்கத்துறை துணை இயக்குநர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தள்ளுபடி
அம்மனுவை விசாரித்த ஒற்றை நீதிபதி, விசாரணை ஆணையத்தை நியமிக்கும் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தது.
நீதிமன்றத்தை அணுக அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருப்பதாக கூறியது. அந்த உத்தரவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு மேல்முறையீடு செய்தது.
அதை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, ஒற்றை நீதிபதி உத்தரவு சரியானதுதான் என்று, கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. அதனால், கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற முறையில், தனி நபர்களைப் போல், அரசியலமைப்பு சட்டத்தின் 226ஆவது பிரிவின்கீழ், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய அம லாக்கத்துறைக்கு உரிமை இல்லை என்று கேரள அரசு தனது மனுவில் கூறியுள்ளது.
அறிவிக்கை
தமிழ்நாடு அரசும் இதே கருத்தை வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள், நீதிபதிகள் சர்மா ஆகியோர் அடங்கிய திபங்கர் தத்தா, சதீஷ் சந்திர அமர்வு முன்பு நேற்று முன்தினம் (20.1.2026) விசாரணைக்கு வந்தன.
மனுக்களுக்கு பதில் அளிக் குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவிக்கை அனுப்பினர்.
226ஆவது விதியின்கீழ் உயர்நீதிமன்றத்தை அணுக அமலாக்கத்துறைக்கான உரிமை குறித்து ஆய்வு செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
