டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எஸ்அய்ஆர் குறித்த உத்தரவுகளை வாட்ஸ்-அப்பில் அனுப்ப கூடாது: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி. என்ன காரணங்களுக்காக வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை விரிவாக தெரிவித்தும் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். இதை அனைத்து கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வெளியிட வேண்டும்.
* எஸ்.அய்.ஆர்.இல் நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பிரதமர் மோடி, பாஜகவுக்கு கிடைத்த தோல்வி. திரிணாமுல் காங்கிரஸ் கருத்து.
* தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நடைபெறும் கடைசிக் கூட்டம் இது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* விமானப் பயணத்தின் கட்டணத்தை அளவுக்கு மீறி உயர்த்தும் நிறுவனங்களின் அடாவடியை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் களத்தில் இறங்கியது. மக்களை சுரண்டும் போக்கு இது என கண்டனம்.
* மும்பை மாநகராட்சி தேர்தலில் ஷிண்டே-சிவசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்றாலும், மேயர் பதவிக்கு குடுமிப்பிடி சண்டை நடைபெற்று வருகிறது. தங்கள் கவுன்சிலர்களை ஷிண்டே அணி பதுக்கி வைத்துள்ளது. இந்த நிலையில் தங்கள் கூட்டணி சார்பில் தான் மேயர் பதவி வகிப்பார் என ஷிண்டே அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘நாங்கள் அறிவியல் சார்ந்தவர்கள்’: ரோடீஸ் நிகழ்ச்சியின் முன்னாள் நடுவரான ரகு ராம் பேட்டி., சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் நடந்த வெளிப்படையான உரையாடலின் போது, தனது 5 வயது மகன் ரிதமை வளர்ப்பது குறித்துப் பேசினார். அவன் எப்படி வேண்டுமானாலும் வளரலாம் ஆனால் மதம் குறித்த பார்வையில் எனது எண்ணத்தை பிரதிபலிக்க வேண்டும் என ரகு ராம் கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ என்று குறிப்பிட்டு, ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் மாநில அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் குன்வர் விஜய்ஷா மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு மத்தியப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
தி டெலிகிராப்:
* பெருநிறுவனங்களுக்கு சாதகமாக பாஜக ‘மவுனக் கலாச்சாரத்தை’ வளர்க்கிறது: “இந்த நாட்டில் அனைவரும் மவுனமாக இருக்க வேண்டும் என்றும், ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே செழித்து, தேசத்தின் முழு சொத்துகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பாஜக விரும்புகிறது.” ராகுல் காந்தி பேச்சு.
– குடந்தை கருணா
