சென்னை, ஜன.19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகா சத்தை தேர்தல் ஆணையம் நீட்டித்துள் ளது. இதன்படி, பொதுமக்கள் வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றுடன் (ஜனவரி 19) அவ காசம் முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அதிரடி முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
புதிய காலக்கெடு: ஜனவரி 30, 2026 வரை.
18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள். முகவரி மாற்றம் அல்லது பெயர்திருத்தம் செய்ய வேண்டியவர்கள். பொது மக்கள் தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் அல்லது வாக்குச்சாவடி மய்யங்களில் நேரிலோ அல்லது Voter Service Portal மற்றும் Voter Helpline App ஆகிய இணைய வழி முறைகள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கூடுதல் கால அவகா சத்தைப் பயன்படுத்தி, தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டி யலில் இடம் பெறுவதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
