மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 09.01.2026 அன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் 60ஆவது ஆண்டு வைர விழாவில் பங்கேற்று, கையேடு வெளியிட்டு விழா பேருரையாற்றினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் எம்.ஜி.ஆர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு டாக்டர் மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் மரு.நாராயணசாமி., மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் உமா மகேஸ்வரி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினீத், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி இராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், முன்னாள் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர்கள், அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
