புதுடில்லி, டிச. 20– இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் அண்மையில் கூடி, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பணியிடங்களை நிரப்புவது குறித்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
இதன்படி, 5 நீதிபதிகளைத் தலைமை நீதிபதிகளாகப் பதவி உயர்வு செய்யவும், ஒரு தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்யவும் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை வழங் கப்பட்டுள்ளது. கொலீஜியத்தின் பரிந்துரைப்படி, பின்வரும் நீதிபதிகள் பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்
நீதிபதி மனோஜ் குமார் குப்தா அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி ரேவதி பி மோஹிதே டேரே மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி எம்.எஸ். சோனக் மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி ஏ. முஹம்மது முஸ்தாக் கேரள உயர் நீதிமன்றத்திலிருந்து சிக்கிம் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதிபதி சங்கம்குமார் சாஹூ ஒடிசா உயர் நீதிமன்றத்திலிருந்து பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவுள்ளனர் நீதிபதி சவுமென் சென் மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வரும் இவர், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளார்.
இந்த பரிந்துரைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தவுடன், குடிய ரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்னா தலைமை நீதிபதியாக பதவி ஏற்க வுள்ள சங்கம்குமார் சாஹூ மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
