புதுடில்லி, டிச.16 மகாத்மா காந்தி 100 வேலை உறுதி திட்டத்தை ஒன்றிய அரசு மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி ஆகியோர் தமிழ்நாட்டின்மீது சமஸ்கிருதம், இந்தியை திணிக்க வேண்டாம் என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் ஒன்றுமே புரியவில்லை என்று சாடியுள்ள ஜோதிமணி, சமஸ்கிருதம் அல்லது இந்தியில் திட்டங்களின் பெயர் வைக்க காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.
