தமிழ்நாடு மாணவர்களின் ஸ்வையம் தேர்வு மய்யம் மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய அமைச்சரின் நடவடிக்கை

1 Min Read

வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. பதிவு

சென்னை, டிச. 14– திமுக மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி.யின் எக்ஸ்தள பதிவு:  தமிழ் நாட்டைச் சேர்ந்த பி.எட் மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில்  ஒதுக்கப்பட்டுள்ள ஸ்வையம் தேர்வு மய்யங் களை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, உரிய உத்தரவுகள்  வழங்கப்பட்டிருக்கின்றன.

இதை தொடர்ந்து 16,000 தேர்வர்களில் 14,700  பேருக்கு அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே தேர்வு மய்யங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன. 1,300 தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் அருகில் உள்ள  மாவட்டங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடனடியாக தலையிட்டு  நடவடிக்கை எடுத்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நன்றி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *