புதுடில்லி, மே 5 – தலைநகர் டில்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், வீராங்கனைகளை நேற்றிரவு காவல்துறையினர் கையாண்ட விதத்துக்கு காங்கிரஸ் மேனாள் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோருடன் காவல்துறையினர் கைகலப்பில் ஈடுபட்ட காட்சிப் பதிவை பகிர்ந்த ராகுல் காந்தி, “பாஜக எப்போதும் இந்தியாவின் மகள்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டு வருந்தியதில்லை. விளையாட்டு வீராங்கனைகள் மீதான இந்த அத்துமீறல் அவமானகரமானது. பெண்களைப் பாதுகாப்போம் என்ற பாஜக முழக்கம் வெற்று கோஷம்” என்று தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் காவல்துறையினரின் நடவடிக்கை – ராகுல் கண்டனம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
