தந்தை பெரியார் இல்லம் திறந்து வைத்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்து

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

காரமடை, டிச. 4- கோவை மாவட்டம் காரமடை அருகே பெரிய ரங்கநாத புரம் பகுதியில் 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய கழகச் செயலாளர் அ.மு.ராஜா, மாவட்ட மகளிரணித் தலைவர் நாகமணி ராஜா ஆகியோர் புதியதாக கட்டியுள்ள தந்தை பெரியார் இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

முன்னதாக புதிய வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் கழக மாவட்டத் தலைவர் சு.வேலுச் சாமி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் ரா.அன்புமதி வரவேற்புரை வழங்க கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், கோபி மாவட்டத் தலைவர்
மு.சென்னியப்பன், பொள்ளாச்சி மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, நீலமலை மாவட்டத் தலைவர் மு.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மரு.இரா.கவுதமன் வாழ்த்துரை வழங்கினார். கழக சொற்பொழிவாளர் க.வீரமணி தொடக்க உரையாற்றினார்.

கூடலூர் நகராட்சித் தலைவர், நகர திமுக செயலாளர் அ.அறிவரசு, காளாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் அதிமுக பொன்னுசாமி,. இந்திய தேசிய காங்கிரஸ் ஜெயக்குமார், ஆதித் தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் சபாபதி, காரமடை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்சு.சுரேந்திரன் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் நா.பிரதீப்குமார், திமுக மேடூர் கணேசன், அதிமுக திலகவதி நாகராஜ், மற்றும்  பழ அன்பரசு, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தரும வீரமணி, பாசமலர் ஆறுமுகம், கோபி மாவட்டச் செயலாளர் குணசேகரன், தோழர் சிவலிங்கம், மாநில இளைஞரணிச் செயலாளர் மு. வீரமணி, மேட்டுப்பாளையம் நகர தலைவர் வே.சந்திரன் நகரச் செயலாளர் பழனிச்சாமி, வழக் குரைஞர் தாராபுரம் சக்திவேல், உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பித்தனர். நிறைவாக நாகமணி ராஜா நன்றியு ரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் வாழ்த்துரை

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆற்றிய உரை வருமாறு:

தந்தை பெரியாரின் பெயரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இல்லத்தை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ராஜா, நாகமணி, அறிவு மணி,அன்புமதி குடும்பத்தினருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்

எந்தவிதமான ஒரு ஆடம்பரமும் இல்லாமல் ரொம்ப அமைதியாக களப் பணி செய்பவர். கொடுத்த பணி மட்டும் இல்லாமல் அவராகவே கூடுதலாக பல பணிகளை எடுத்து பல்வேறு செயல் திட்டங்களையும் வகுத்து எதுவுமே மேலே இருந்து அவருக்கு வேண்டுகோள் வராத போதும் கூட தாமாகவே முன்வந்து இயக்கப் பணிகளை செய்கிறார்.

அதேபோல் இந்த வீடு கட்டும் போது ராஜா நாகமணி ஆகியோரின் கடுமையான உழைப்பு தன்னம்பிக்கை, விடாமுயற்சி எவ்வளவு இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. ஒரு ஆண்டு காலமாக இந்த வீடு கட்ட உழைத்திருக்கிறார்கள் அவர்களுடைய குழந்தைகள் தமது பங்களிப்பை வழங்கி சிறப்பாக இல்லத்தை அமைத்து உள்ளனர்.

அதையெல்லாம் விட பெருமை யானது நாமெல்லாம் சுயமரியாதை உணர்வோடு மானத்தோடு வாழ்கிறோம் என்றால் அது தந்தை பெரியாரால் தான் என்பதால் இந்த இல்லத்திற்கு தந்தை பெரியார் இல்லம் என்ற பெயர் வைத் திருக்கிறார் அதுதான் நமக்கு மிகப் பெருமையாக இருக்கிறது இந்த குடும்பத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜா வாழ்க்கையில் நடந்த இட்லி கதை பற்றி சந்திரசேகர் சொன்னார். அதைச் சொல்லும் போது அன்புமதி உணர்ச்சி வசப்படுகிறார் – கண்ணை துடைக் கிறார் – ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழர் பின்னும் ஒரு கதை உண்டு. இந்த கதையெல்லாம் மாறுவதற்கு காரணமானவர் அறிவாசான் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் கொள்கை யைப் பின்பற்றக் கூடிய பிள்ளைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்

இவர்கள் வாழ்க்கையில் மேம்பட வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கிறது என்று கூறி இந்த குடும்பம் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துகளை கூறி விடை பெற்றுக் கொள்கிறேன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *