புதுடில்லி, டிச.3- கைப்பேசியில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் கணக்கு இயங்காது என்ற புதிய விதிமுறையை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த விதிமுறை இது டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
கைப்பேசியில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட செயலி உறுதி செய்ய வேண்டும் என்றும் அதேபோல வாட்ஸ் அப் வெப் இல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே செயலற்றதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலற்ற சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்தவே இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
