அமராவதி, டிச.3 ஓய்வு பெற்ற செவிலியரிடம் சிபிஅய் மற்றும் அமலாக்கத்துறை அதி காரிகள் என கூறி மிரட்டி ரூ.48 லட்சத்தை பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
மிரட்டல்
ஆந்திர மாநிலம் அன்ன மய்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேபுரி பெஞ்சமின் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சமீபத்தில் ஒரு காணொலி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், தாங்கள் சிபிஅய் மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்கள், பெஞ்சமினின் பான் கார்டை தவறாகப் பயன்படுத்தி டில்லியில் போலியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்த வங்கிக் கணக்கு வழியாக ரூ.48 லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டினர். இந்த போலி அதிகாரிகள், பெஞ்சமினிடம் காணொலி அழைப்பை துண்டிக்கக் கூடாது என்றும், எங்கும் வெளியில் செல்லவோ, யாருடனும் பேசவோ கூடாது என்றும் தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர். வழக்கு மற்றும் கைது நடவ டிக்கைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், பணம் செலவாகும் என்று கூறி, பணத்தைக் கேட்டு மிரட்டினர்.
ரூ.48 லட்சe் மோசடி
பயந்துபோன பெஞ்சமின், இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க, அவர்கள் குறிப் பிட்ட பல்வேறு வங்கிக் கணக்கு களுக்கு, அவர்கள் குறிப்பிட்ட ரூ.48 லட்சத்தை அனுப்பி வைத்தார்.
பின்னர் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த பெஞ்சமின், உடனடியாகப் காவல்துறை புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறை யினர் இதுபோல் பல்வேறு மாநிலங்களில் டிஜிட்டல் மோசடிகளில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை கைது செய்தனர்.
இந்தச் கொள்ளை அரசு அதிகாரிகள் போல் மிரட்டி செய்யப்படும் டிஜிட்டல் மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தி யுள்ளது.
