தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி Asiriyar K Veeramani அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
பெரியார் திடலும் – அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு #DravidianModel நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!
ஆசிரியரின் பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து

தந்தை பெரியாரின் பெருந்தொண்டராக, திராவிட இயக்கங்களின் கொள்கை முன்னோடியாக சமூகநீதி காத்திட ஓயாது செயலாற்றிவரும் மானமிகு ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
இன்னும் பல ஆண்டுகள் ஆசிரியரின் பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! உலகம் பெரியார்மயமாக வேண்டும் என்ற அவரது கனவு மெய்ப்பட வேண்டும்!
பெரியாரையும், திராவிடத்தையும் வரும் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – கனடா 93-ஆம் பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் எங்கள் வழிகாட்டி மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – கனடா தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆசிரியர் அய்யா நூற்றாண்டு கண்டு பெரியாரையும், திராவிடத்தையும் இன்னொரு தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
வியத்தகு ஆளுமை ஆசிரியருக்கு வாழ்த்து

தமிழச்சி தங்கபாண்டியன் (நாடாளுமன்ற உறுப்பினர்)
தந்தை பெரியாருக்குப் பிறகு தொடர்ந்து பெரியாரியத்தை உலகமெங்கும் எடுத்துச் சென்று வீரியப்படுத்தி வியத்தகு ஆளுமையாக வலம் வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா திரு.கி. வீரமணி அவர்களுக்கு வணக்கமுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்துகள்
சுயமரியாதை உணர்வூட்டி வரும்
ஆசிரியர் வாழ்க!

பி.வில்சன் (மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்)
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளை எட்டுத்திக்கும் முழங்கி, இளைய சமுதாயத்திற்கு சுயமரியாதை உணர்வூட்டி வரும் தத்துவத் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா திரு.கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன்!
