புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்துகொண்டிருக் கின்றீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம்.
அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பாஸ்வானிட மிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேபோல், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்
(சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் (23-12-1992) அன்று திருச்சி – பெரியார் நூற்றாண்டு நினைவுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவுநாள், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில்)
இந்திய நாட்டுக்கே
வழிகாட்டியவர்
வழிகாட்டியவர்
இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் வீரமணியவர்கள், சமூகநீதி உரிமையின் இரண் டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்துச் சொன்னார். அதற்கான அமைப்பையும், இயக்கத்தையும், தலைமையேற்று நடத்த முன்வர அவரைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை நீங்கள் அமல்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவருடைய வழிகாட்டலில், நாடு தழுவிய வகையில் நடத்தப்பெறும் சமூக நீதிக்கான இரண்டாம் கட்டப் போராட்டம் உறுதியாக வெற்றிபெறும் என்பதில் அய்யம் இல்லை.
(1-10-1994 சென்னை – திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டில், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆற்றிய உரையின் பகுதி – விடுதலை’ 3-10-1994)
நம்பிக்கையுடன்
எதிர்பார்க்கிறேன்!
எதிர்பார்க்கிறேன்!
சமூகநீதிக்கு ஆதரவான அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த மதவெறிச் சக்திகளின் சவாலை சந்திக்கவேண்டும். மத வெறிச் சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரபிரேதசத்தில் அவர்கள் முதுகெலும்பை நாம் முறித்தாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள் நான் முன்னின்று நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் ‘கொறடா’ ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டு, செயல்பட வேண்டும். – நான் திரு. வீரமணி அவர்களையும், அவரது இயக்கத்தவர்களையும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். அவர்கள் சுயநலமற்ற தொண்டினைத் தரக்கூடியவர்கள்.
(முன்னாள் பிரதமர் வி.பி. சிங்,
டில்லி பெரியார் விழா – 19.9.1995)
