கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள், ‘நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா?’ என்றும் சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் – தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்தரிக்குமோ, அப்படி காட்சி தருவார். பண்பு பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்! சின்னஞ்சிறு வயதில் மேடையில் ‘ஸ்டூல்’ போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை. கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம்.
– ‘சாவி’ இதழ்
