இந்தியாவில் 25 சதவீதம் எடை குறைவாக வளரும் குழந்தைகள் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, நவ.30– காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சார்ந்த குழந்தைகள், பாதிக்கப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளை விட 25 சதவீதம் எடை குறைவாக வளர்கின்றனர் என்று ஆய்வுகள் வெளியாகி உள்ளன.

டில்லியை சேர்ந்த institution of economic growth எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பிரசவம் மருத்துவ மனைகளிலோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திலோ இல்லாமல் வீட்டில் அல்லது வேறு இடத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் 38 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இந்த மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் வளர்கின்றனர். அதேபோல மந்தமான வளர்ச்சியும் குழந்தைகளிடையே பதிவாகி இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் சுமார் 80 சதவீத மக்கள் புயல், வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர். எனவே இந்தியா பன்னாட்டளவில் வளர்ச்சி அடைய, இந்த காலநிலை பாதிப்புகள் பெரிய தடையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வானிலை பாதிப்புகளால் இடர்களை எதிர்கொள்ளக்கூடிய மக்கள் வேறு இடத்திற்கு புலம் பெயர்ந்து செல்வது இந்தியாவில் குறைவாக இருப்பதால், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவில் மோசமாக எதிரொலிக்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.

எனவே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், அரசு சிறப்பு கவனம் செலுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு களை, எப்படி கட்டுப்படுத்துவது என்றும், புதை படிம எரிபொருட்களை முடிந்த அளவு எவ்வாறு தவிர்ப்பது என்றும் ஒன்றிய அரசு விஞ்ஞான ரீதியாக ஆலோசனை மேற்கொண்டு அதை அமல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் காலநிலை மாற்றத்தால் பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டது.

இந்தியாவிலும் பருவமழை சில நேரங்களில் தீவிரமாகவும், சில நேரங்களில் முற்றிலும் பெய்யாமலும் போய்விடுகிறது. இதற்கும் காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *