டெக்கான் கிரானிக்கல், சென்னை
தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி யில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கடிதம்: கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு மோடி தலையிட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தி இந்து:
உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்கள் குறித்த கொலிஜியம் தரவை தலைமை நீதிபதி வெளியிட்டார். கொலிஜியம் அங்கீகரித்த 93 பெயர்களில், பெண்கள் 15 பேர், ஓபிசி/பிசி வேட்பாளர்கள் 11 பேர், பட்டியல் ஜாதி சமூகங்களைச் சேர்ந்த பெயர்கள் 10 பேர், சிறுபான்மையினர் 13 பேர் மற்றும் நீதிபதிகள் தொடர்பானவர்கள் 5 பேர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
சமாஜ்வாடி 2024 இல் வெற்றி பெற்ற ஒவ்வொரு தொகுதிகளிலும் 50,000 வாக்காளர்களை நீக்க பாஜக – தேர்தல் ஆணையம் கூட்டுச் சதி: அகிலேஷ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்படி உயர் கல்விக்கு ஒரே ஆணையம்: யுஜிசி, ஏஅய்சிடிஇ, என்சிடிஇ வாரியங்கள் இனி கலைக்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்ய திட்டம்.
கடும் எதிர்ப்பை மீறி அமல்: புதிய தொழிலாளர் சட்டங்கள்; ஒன்றிய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு: தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நேற்று முன்தினம் (21.11.2025) அமல்படுத்தப்பட்டுள்ளன. 29 பழைய சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சில மாற்றங்களுடன் இந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
– குடந்தை கருணா
