டில்லி, நவ.17 கடந்த 10.11.2025 அன்று நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், 11.11.2025 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் பேசிய காவல் ஆய்வாளர் நரேந்திர குமார் சர்மா, “மக்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார். சமூக ஊடகங் களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.
பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதி களுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட் டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது தவறு. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்.
இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நக்சல்களாக உள்ளனர். கடற்படையில் பல பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
இந்த நாற்காலி எனக்கு தாய் போன்றது. நான் 34 ஆண்டுகளாக பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
மாணவனாக இருந்தபோது நான் கண்டு வியந்த காவல்துறை அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காவல் துறையில் சேர்ந்தேன்.” என்று பேசினார்.
மேலும் காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப் படும் போக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நரேந்திர குமார் இவ்வாறு பேசிய காணொலி இணையத்தில் வைரலான நிலையில் அவர் களப் பணியில்(Field of duty) இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட் டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?
சென்னை, நவ.17 இமயமலைப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் சமீபத்திய புவியியல் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இமயமலை உருவாவதற்குக் காரணமான இந்தியத் தட்டு அம்மலைக்கு அடியில் சிதைந்து வருவது முப்பரிமாண முறையில் அமைந்த நிலநடுக்கத் தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது. திபெத்தின் தென்பகுதியிலுள்ள யேடாங் குலு, கோனா சங்க்ரி இடையே இது நிகழ்வதும், இந்தியத் தட்டின் கீழ்ப்பகுதியான ‘லிதோஸ்பெரிக் மேன்டில்’ மேல்பகுதியில் இருந்து அகன்று பூமிக்குள் புதையுண்டு வருவதும் நிரூபணமாகியுள்ளது. நிலநடுக்கம் அதிகமாவதற்கான காரணம் மட்டுமல்லாமல், பூமியின் அடிப்பரப்பில் பல்லாண்டுகளாக நிகழ்ந்துவரும் கண்டங்களுக்கு இடையேயான நகர்வினால் மலைகள் எப்படி உருவாகின்றன என்பதையும் இது தெளிவுபடுத்துவதாகச் சொல்கின்றனர் புவியியலாளர்கள்.
