ஹிஜாப் விவகாரம் பாதிக்கப்பட்ட மாணவி வேறு பள்ளியில் சேர கேரள அரசு உதவி கல்வி அமைச்சர் சிவன்குட்டி உறுதி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருவனந்தபுரம், அக்.21  கேரளாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி வேறு பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கு மாநில அரசு உதவத் தயாராக உள்ளது என்று கேரள கல்வி அமைச் சா் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

‘இந்தக் கோரிக்கை தொடா்பாக மாணவி அரசை அணுகினால், அதற்கென சிறப்பு உத்தரவும் பிறப்பிக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிஜாப்

கேரள மாநிலம், கொச்சி பள்ளுருத்தி பகுதியில் அமைந்துள்ள புனித ரீட்டா கிறிஸ்தவப் பள்ளி நிர்வாகம், 8-ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதித்ததாகவும், பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர், மேலும் சில பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் சா்ச்சையான தைத் தொடா்ந்து, பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவித்தது. பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையினருக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா், ‘ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை பள்ளி நிர்வாகம் பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து, அவரின் கல்வி உரிமையைப் பறித்துள்ளது’ என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதை மறுத்த பள்ளி நிர்வாகம், மாணவி வகுப்புக்குச் செல்ல ஒருபோதும் அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவித்தது. மேலும், பள்ளி நிர்வாகம் தரப்பு கருத்தைக் கேட்காமல் இந்த அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநா் சமா்ப்பித்துள்ளதாகவும், எனவே, அவரின் அறிக்கையை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

இதனிடையே, ‘இந்த விவகா ரத்தால் தனது மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதால், அவரை வேறு பள்ளியில் சோ்க்க திட்டமிட்டுள்ளோம்’ என்று அவரின் தந்தை 17.10.2025 அன்று தெரிவித்தார்.

இதுதொடா்பான கேள்விக்குப் பதிலளித்த, அப் பள்ளியின் முதல்வா் ஹெலீனா ஆல்பி, ‘பள்ளி நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கு உட்படுவதாக இருந்தால் மாணவி பள்ளிக்குத் திரும்பி, படிப்பைத் தொடரலாம்’ என்றார்.

விரும்பும் பள்ளியில் சேர்க்கை

இந்நிலையில், மாணவியை வேறு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் முடிவு குறித்த திருவனந்தபுரத்தில் செய்தியாளா்கள் 18.10.2025 அன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாநில கல்வி அமைச்சா் சிவன் குட்டி, ‘வேறு பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கு மாணவி விரும்பினால் அரசை அணுகலாம். அவர் விரும்பும் பள்ளியில் சோ்க்கை பெற அரசு சார்பில் சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும். மாநில கலாச்சாரத்தின்படி, எந்தவொரு மாணவரும் பள்ளியில் சேரும் வாய்ப்பை இழக்கக் கூடாது. மாண வியின் இந்த நிலைக்கு பள்ளி நிர்வாகம்தான் முழு பொறுப்பு’ என்றார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *