கொரட்டூர், நவ. 9- பெரியார் அண்ணா-கலைஞர் பகுத் தறிவு பாசறையின் 394 ஆவது நிகழ்வு கொரட் டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலு வலகத்தில் 4.-11.-2023 சனிக் கிழமை மாலை 6-30 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலா ளர் க.இளவரசன் தலை மையில் பாசறை ஒருங்கி ணைப்பாளர் இரா. கோபால் வரவேற்புரையு டன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞ ரணி செயலாளர் ஏ.கண் ணன், மேனாள் சென்னை மாமன்ற மேனாள் உறுப்பினர் தேவேந்திர குமார், கோபி ஆகியோர் முன்னிலையில் மறைந்த சமூக செயற்பாட்டாளர் கொரட்டூர் கு.பஞ்சாட் சரம் உருவப்படத்தை அம்பத்தூர் பகுதி (அ) தெற்கு தி.மு.க.பொருளா ளர் கு.சங்கர் திறந்து வைத்து மரியாதை செலுத் தினார்.
நிகழ்வில் அரவிந்தன், பிச்சை மணி, ஜெயசீலன், கணேஷ், முரளி மோகன், சரவணன், கார்த்திக்கே யன், தனசேகர், ராஜா, ஜார்ஜ், பெருமாள், சிவ குமார், ஜெய ந்தி, கெஜல ட்சுமி,பொற்செல்வி, பிரபா, கவிதா,ரஷீதா, தமிழ் மணி,சரத், முருகா, அஜித், வனிதா, இந்திரா, புஜ்ஜி,பாரதி,ரக்சிதா, சின்னு, கருப்பசாமி, ஆறு முகம், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் அருமைநாதன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.