புதுடெல்லி, அக்.13 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி ஆகிய 4 தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.
இந்நிலையில், பெரு கத்தோலிக்க பல்கலைக்கழகம், சிலி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் மாணவர்களுடன் உரையாடியபோது எடுக்கப்பட்ட காணொலி காட்சியை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
கல்வி என்று வரும்போது, அது ஆர்வம், வெளிப்படையாக சிந்திக்கும் சுதந்திரம், அரசியல், சமூக அச்சமின்றி கேள்வி கேட்பது ஆகியவற்றுடன் தொடங்குகிறது. சுதந்திரத்தின் அடித்தளமான கல்வி, ஒரு சிலரின் சிறப்புரிமை ஆகக்கூடாது. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், சிந்தனையை ஊக்குவிக்கும், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் கல்விமுறை இந்தியாவுக்கு தேவை. அதற்கு பெரு அல்லது அமெரிக்காவுடன் கைகோர்ப்பது முன்னேற்றத்துக்கான வழியாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.