சென்னை, அக்.11- இஸ்ரேல் பிரதமரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமருக்கு பாராட்டு
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்ப தாவது: காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப் படுகொலையும் உலகம் முழுவதும் கண் டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி யிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், அது நெதன்யாகுவின் ‘சிறந்த தலைமையின் விளை வாகும்’ என்றும் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இனப் படுகொலை செய்து, ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், அப்பாவி மக்களை படுகொலை செய்த நெதன்யாகுவை இவ்வாறு பாராட்டுவது, இந்தியாவின் பாரம் பரியமான மனிதநேய வெளியுறவுக் கொள் கைக்கு எதிரானது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளரைப் புகழ்வது, அகிம்சையைப் போதித்த இந்தியாவுக்கு கடுமை யான அவப்பெயரை உண்டாக்கும். இந்தியா மீது உலகநாடுகள் வைத்திருக்கும் நல்லெண் ணத்தைக் கெடுக்கும் செயலாகும்.
கண்டனம்: இந்தியாவின் குரல் எப்போதும் மனிதநேயம், அமைதி, நீதிக்காக இருக்க வேண்டும். இனப் படுகொலை செய்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அல்ல. எனவே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.