உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 9 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது.

இதனால், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் இந்தாண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது.

இந்த அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த 3-ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *