இனவெறி கண்ணோட்டத்தோடு ‘இந்தியர்கள் அமெரிக்கா திரும்பி வருவதை’ எதிர்த்து பிரச்சாரம்

புதுடில்லி, செப்.29 எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு திரும்புவதைத் தடுக்க, அந்நாட்டு வலதுசாரி அமைப் பினர் இன ரீதியில் பிரச்சா ரம் தொடங்கியது தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணம் 1 லட்சம் டாலராக உயர்த்தப்படும் என கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து, விடுமுறையில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தின. இதனால், ஏராளமானோர் ஒரே நேரத்தில் விமான பயணச் சீட்டு புக் செய்ததால் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. இதனிடையே, எச்1பி விசா வைத்திருக்கும் இந்திய ஊழியர்கள் திரும்புவதைத் தடுக்க, வலது சாரி அமைப்பின் (4சான்) பயனாளர்கள், ‘ஆபரேஷன்க்ளாக் தி டாய்லெட்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு பயனாளர் “எச்1பி செய்திக்குப் பிறகு இந்தியர்கள் இப்போதுதான் விழித்துக் கொள்கிறார்கள்.

அவர்களை இந்தியாவிலேயே வைத்திருக்க விரும்புகிறீர்களா? விமான முன்பதிவு முறையைத் தடை செய்யுங்கள்” என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், “100 இருக்கைகளின் முன்பதிவை பூட்டி விட்டோம்’’ என பதிவிட்டிருந்தார். அதாவது, பயணச்சீட்டு முழுவதும் முன்பதிவு செய்யாத நிலையிலும், பயணச்சீட்டு கிடைக்காத நிலை இருந்தது.

அமெரிக்காவின் வலதுசாரி அமைப்பினர் விமான நிறுவனங்களின் தளத்தில் முன்பதிவு செய்வது போல நடித்துள்ளனர். ஆனால் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவில்லை. இதனால், இந்தியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

இதுகுறித்து ஆஸ்டின் நகரில் பணிபுரியும் மென்பொருள் பொறி யாளர் அம்ருதா தமனம் கூறும்போது, “ட்ரம்ப் அறிவிப் பால் விஜயவாடாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமான பயணச் சீட்டு பதிவு செய்வதற்கு முயன்றேன். அப்போது இணையதளம் தொடர்ந்து முடங்கியது. இதனால், கத்தார் ஏர்வேஸில் 2 ஆயிரம் டாலர் கூடுதலாக செலவழித்து பயணச் சீட்டு முன்பதிவு செய்தேன். இது வழக்கமான கட்டணத்தைப்போல 2 மடங்கு அதிகம் ஆகும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *