அமெரிக்காவின் அடுத்த கட்டம் மருந்துப் பொருள்களுக்கு 100 விழுக்காடு வரியாம்!

புதுடில்லி, செப். 27- அக்டோபர் ஒன்று முதல் ‘மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு 100 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதாவது எந்தவொரு பிராண் டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100% வரி விதிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப் பின் தாக்கம் என்பது இந்தியாவில் பெரிய அளவில் இருக்காது என்றே கூறப்படுகிறது. எனினும் இதன் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருந்து பொருட்களுக்கு
100 விழுக்காடு வரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100% வரி விதிப்பதாக அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது. இந்த 100% வரி என்பது ‘பிராண்டட்’ அல்லது ‘காப்புரிமை பெற்ற’ மருந்துப் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

அதேநேரம் ஒரு மருந்து நிறுவனம் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தி ஆலையை அமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தால் (அதாவது, ‘அடித்தளம் அமைத்தல்’ அல்லது ‘கட்டுமானத்தில் இருப்பது’) அவர்களுக்கு இந்த 100 விழுக்காடு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மற்ற நாடுகள் அமெரிக்காவிற்குப் பொருட்களை ‘அதிகமாக’ அனுப்புவதைத் தடுக்கவும் இந்த வரிகளை விதிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்,

ஜெனரிக் வகை

இந்த அறிவிப்பு இந்திய மருந்துத் துறை நிறுவனங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஜெனரிக் மருந்துகளுக்கு விலக்கு அளித்துள்ளதால் சிக்கல் குறைவு. ஏனெனில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜெனரிக் மருந்துப் பொருட்கள் உற்பத்தியாளராக உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் மருந்துகளில் பெரும்பாலானவை ஜெனரிக் வகையைச் சேர்ந்தவையாகும்.

டிரம்ப்பின் அறிவிப்பு, தற்போது பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இந்தியாவின் ஜெனரிக் மருந்து ஏற்றுமதிக்கு உடனடிப் பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. அதேநேரம் சன் பார்மா போன்ற சில இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் பிராண்டட் மருந்துகளை அதிக அளவில் விற்பனை செய்கின்றன. அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகள் இல்லாத நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படலாம். எனினும் டாக்டர் ரெட்டிஸ், சிப்லா, லூபின் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே அமெரிக்காவில் தங்கள் உற்பத்தி ஆலைகளை வைத்திருப்பதால், அவற்றின் தாக்கம் ஓரளவுக்குக் குறைவாக இருக்கும் என தெரிகிறது. இந்த 100 விழுக்காடு வரி, பிரதானமாக காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தியாவின் பலமான ஜெனரிக் மருந்துக்கு வரி விதித்தால் அது மிகப்பெரிய பாதிப்பை இந்தியாவிற்கு ஏற்படுத்தும். ஆனால் அப்படி டிரம்ப் அறிவிக்கவில்லை.. அதேநேரம் இதன் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *