ெஜருசலேம், செப்.25-
‘ஆயுதங்களை உடனடியாக ஒப்படை யுங்கள்’ என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், தொடங்கி இரண்டாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நீண்ட காலமாக பேசப்படும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது என்ற முழக்கம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அய்.நா.,வின் 80ஆவது பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கிறது. இதில், இது குறித்து முக்கிய விவாதம் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளும், ஹமாஸ் தலையீடு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளன.
அய்.நா., பொது சபை கூட்டத்தில், பாலஸ்தீனத்தின் அதிகார சபையின் அதிபரான மஹ்மூத் அப்பாஸ், காட்சிப்பதிவு கான்பரன்ஸ் மூலம் பேசியதாவது:
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். இதுவரை இவ்வாறு செய்யாதவர்கள், இதைப் பின்பற்றுமாறு நாங்கள் அழைக்கிறோம். பாலஸ்தீனம் அய்க்கிய நாடுகள் சபையில் முழுமையான உறுப்பினரா வதற்கு உங்கள் ஆதரவை நாங்கள் கோருகிறோம். எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் எவ்வித பங்களிப்பையும் வழங்கக்கூடாது.
ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் ஆயுதங்களை தற்போதைய பாலஸ்தீன தேசிய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். எங்களுக்கு வேண்டியது ஆயுதங்கள் இல்லாத ஒரே சட்டத்தின் கீழ், ஒரே ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்புப் படையைக் கொண்ட ஒரு ஒருங்கி ணைந்த அரசு.கடந்த 2023 அக்டோபர் 7இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையும், பொதுமக்கள் கொல்லப் பட்டதையும் நாங்கள் கண்டிக்கிறோம்.
போர் முடிவுக்கு வந்த பின், அதிபர் பதவி மற்றும் பார்லிமென்டுக்கு தேர்தல்கள் நடத்தப் படும். தற்போது அதி கார சபையிடம் உள்ள அதிகாரம், தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மூன்று மாதங்களுக்குள் ஒரு இடைக்கால அரசியலமைப்பு வரைவை அமைப்போம்.இவ்வாறு அவர் பேசினார்