வேலையில்லா திண்டாட்டத்திற்கும் – வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு: இளம் தலைமுறை இனியும் சகித்துக் கொள்ளாது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 Min Read

புதுடில்லி, செப்.24- வேலையில்லா திண் டாட்டத்துக்கும், வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு இருப்ப தாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நேர்மையாக வெற்றி பெறவில்லை

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வேலையில்லா திண்டாட்டம்தான், இளைஞர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை. அது, வாக்கு திருட்டுடன் நேரடி தொடர்பு கொண்டது.

அதாவது, ஒரு அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சிக்கு வரும் போது, அதன் முதல் பணி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதுதான். ஆனால், பா.ஜனதா, தேர்தலில் நேர்மையாக வெற்றி பெறவில்லை. அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்தும், வாக்குகளைத் திருடியும் அவர்கள் ஆட்சியில் இருக்கி றார்கள்.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

அதனால் தான் வேலையில்லா திண்டாட்டம், 45 ஆண்டுகள் காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. வேலை வாய்ப்புகள் சரிந்து விட்டன. ஆள்தேர்வு நடைமுறை சீர்குலைந்து விட்டது. இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டித் தேர்வின் வினாத்தாளும் கசிந்து விடுகிறது. ஆள் தேர்வுப் பணி, ஊழலில் சிக்கித் தவிக்கிறது.

நாட்டின் இளைஞர்கள் கடின மாக உழைக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்துக் காகப் போராடுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி, தன்னை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்.

பிரபலங்களை வைத்து பாராட்ட வைக்கிறார். பெரும் பணக்காரர்கள் மட்டுமே  லாபம் சம்பாதிக்க உதவுகிறார். இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து, அவர்களை விரக்தியில் தள்ளுவதுதான் அரசின் அடையாளமாகி விட்டது.

தற்போது நிலைமை மாறி வருகிறது. உண்மையான போராட்டம், வேலை வாய்ப்புக்கு மட்டுமின்றி, வாக்கு திருட்டுக்கு எதிராகவும்தான் என்பதை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.  ஏனென்றால், தேர்தல்கள் திருடப்படுவது நீடிக்கும் வரை வேலையில்லா திண்டாட்ட மும், ஊழலும் உயர்ந்தபடியே இருக்கும்.

வேலைவாய்ப்பு திருட்டையும், வாக்கு திருட்டையும் இளம்தலைமுறை இனிமேலும் சகித்துக்கொள்ளாது. மேற்கண்டவற்றில் இருந்து இந்தியாவை விடுவிப்பது தன் உச்சக்கட்ட நாட்டுப் பற்றாகும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *