கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.9.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தேர்தல் நாள் வரைக்கும் பசி – தூக்கம் – ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள்! ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம்! 2026-லும் நாமே உதிப்போம்! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

* குடியரசு துணைத் தலைவர் தேர்தல், கொள்கை ரீதியான போர், கார்கே கருத்து.

* புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் துணைத் தலைவர் பாரபட்சம் இல்லாமல்   மாநிலங்களவையில் நடந்து கொள்ள வேண்டும், தலையங்கம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது புதிய சவால்களை மதிப்பிடுவதற்காக, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முன் சோதனை தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் திட்ட மிடப்பட்டுள்ளது

தி இந்து:

* மராத்தா ஒதுக்கீட்டில் அரசு அறிவுறுத்தல் குறித்து கவலையை எழுப்பும் வகையில், முதலமைச்சருக்கு மகாராட்டிரா கேபினட் அமைச்சர் சாகன் புஜ்பால் கடிதம். திரும்பப் பெற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மறு நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் கிடப்பில் போட முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிரடி

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *