சென்னை, செப்.9- சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சிறீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சிறீ லியோ முத்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு சாய்ராம் கல்வி குழுமங் களின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, ‘எங்கள் கல்வி நிறுவனம் கடந்த 26 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான என்ஜினீயர் பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது. சிறப்பாக படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு லியோமுத்து உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2 கோடி மதிப்பில் வழங்கி வருகிறோம். இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக எங்கள் கல்லூரி விளங்கி வருகிறது’ என்றார்.
1,262 பேருக்கு பட்டம்
சிறப்பு விருந்தினராக ‘தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஏ.வேலு மணி கலந்து கொண்டு 1,066 இளநிலை பட்டதாரிகள், 196 முதுநிலை பட்டதாரிகள் என 1,262 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
ரேங்க் பட்டியலில் இடம் பிடித்த 39 மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் தங்க பதக்கங்கள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் முதல்வர் ஜெ.ராஜா வரவேற்று பேசினார். பேராசிரியர் கே.பழனிக் குமார் கல்வி அறிக்கையை வாசித்தார். அறங்காவலர்கள் ஆர்.சதீஷ்குமார்,
பி. பாலசுப்பிரமணியம், முதன்மை தகவல் அதிகாரி கே.நரேஷ்ராஜ், நிர்வாக இயக்கு னரான ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.அதிகாரி ஆர்.பழனியாண்டி மற்றும் டீன்கள் சி.ஆர்.ரெனிராபின், எல்.அருணாச்சலம் மற்றும் கே.மாறன் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் என 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். முனைவர் எ. ராஜேந்திரபிரசாத் நன்றியுரை வழங்கினார்.