சென்னை, செப்.6- சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் பணியாற்றி வந்த மருத்துவர் சங்குமணி, ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பணியிடத்தில், திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி வந்த மருத்துவர் ஆர்.சுகந்திராஜகுமாரி, பதவி உயர்வு மூலம், சென்னை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுகந்திராஜகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பல்கலை அளவில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்றவர். தான் பிறந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துக் கல்லூரியில் பேராசிரியராகவும், தலைமை இயக்குநராகவும், பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தலைவராகவும் பணியாற்றினார். இவ்வாறு அரசு முதன்மைச் செயலர் பி.செந்தில் குமார் ெவளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வித் துறைக்குப் புதிய இயக்குநர்!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
