தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவில் நடத்திட வேண்டுகிறோம்.
2025 செப்டம்பர் மாதம் முழுவதும் இதற்கான காலம் ஆகும்.
மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டுமே போட்டி நடத்திட வேண்டும்.
போட்டி நடத்தப்படும் இடத்தின் உரிமையாளரின் அனுமதி பெற்று நடத்திட வேண்டும்.
முதலாம், இரண்டாம், பரிசுகள் வழங்கிட வேண்டும். ஆறுதல் பரிசுகள், பங்கேற்போர் பரிசுகள் மாவட்ட அமைப்புகளே முடிவு செய்து கொள்ளலாம்.
பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
பரிசுகளையும், போட்டிக்கான நேர அளவையும் அந்தந்த மாவட்டங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகத்துறை, பகுத்தறிவு கலை, இலக்கிய பிரிவு, திராவிடர் கழக அனைத்து அணிப் பொறுப்பாளர்கள் தோழர்கள், உணர்வாளர்களை ஒருங்கிணைத்து நடத்திட வேண்டும்.
போட்டிக்கான நடுவர்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டமும் தங்களது மாவட்டத்திலுள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள், பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பொறியியல் கல்லுரிகள் என அனைத்து வகைக் கல்லூரிகளுக்கும் செய்தியை கடிதம், துணடறிக்கைகள், மின்னஞ்சல், புலனம் (வாட்ஸ் அப்), முகநூல், படவரி (இன்ஸ்டாகிராம்) வழியே தெரிவித்து நடத்திட வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் நேரில் சென்று தெரிவிப்பது சிறந்தது.
போட்டிக்கான தலைப்புகள்
- பெரியாருக்கு முன்னும்… பெரியாருக்குப் பின்னும்….
- பெரியார் ஒரு கேள்விக்குறி? ஒரு ஆச்சரியக்குறி!
- எப்போதும் தேவை பெரியாரே!
- இட ஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை
- நம்மை எதிர்நோக்கும் பிரச்சனைகள் ……
6..பெரியார் இல்லாவிடில் இன்றும்….. நாளையும்…… நம் நிலை…..
போட்டி நடத்தப்படுவது குறித்த திட்டமிடல், துண்டறிக்கை ஆகியவற்றையும், போட்டி நடந்தபிறகு கலந்துகொண்டவர்கள் முழு விவரமும் “பெரியார் பேச்சுப்போட்டி” என்ற புலனம் (வாட்ஸ் அப்) குழுவிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிட வேண்டுகிறோம்.
போட்டி குறித்து பகுத்தறிவாளர் கழக
மாநிலப் பொறுப்பாளர்கள்
இரா.தமிழ்ச்செல்வன் – 96770 11415
வி.மோகன் – 91598 57108
வா.தமிழ் பிரபாகரன் – 9003 730979 ஆ.வெங்கடேசன் – 98406 06428
ஆகியோரிடம் அலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
– பகுத்தறிவாளர் கழகம்